வரலாற்று உச்சத்தில் முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி.. லாபத்தினை அள்ளிய முதலீட்டாளர்கள்..!

இன்றைய பங்கு சந்தை நிலவரம்
Forum rules
பொறுப்புத் துறப்பு

வர்த்தகம் மற்றும் சேமிப்பு தளத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் கட்டுரைகள் அல்லது செய்திகள் வர்த்தகம் மற்றும் சேமிப்பு தளத்தின் உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, இவற்றால் ஏற்படும் இழப்புகளுக்கு வர்த்தகம் மற்றும் சேமிப்பு தளம் பொறுப்பேற்காது.

காப்புரிமை மீறல்கள் இடம்பெற்றிருந்தால் அறியத்தரலாம். உடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
Post Reply
Admin
Site Admin
Posts: 10
Joined: Sun Jan 10, 2021 4:49 pm

வரலாற்று உச்சத்தில் முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி.. லாபத்தினை அள்ளிய முதலீட்டாளர்கள்..!

Post by Admin »

இன்று காலையிலேயே வரலாற்று உச்சத்தில் தொடங்கிய சந்தைகள், முடிவிலும் புதிய உச்சத்திலேயே முடிவடைந்துள்ளன.

குறிப்பாக சென்செக்ஸ் 609.83 புள்ளிகள் அதிகரித்து, 52,154.13.16 புள்ளிகளாகவும், இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 151.40 புள்ளிகள் ஏற்றம் கண்டு, 15,314.70 ஆகவும் முடிவடைந்துள்ளது. இதற்கிடையில் 1337 பங்குகள் ஏற்றத்திலும், 1648 பங்குகள் சரிவிலும், 149 பங்குகள் மாற்றமில்லாமலும் முடிவடைந்துள்ளன.

தொடர்ச்சியாக மூன்று வர்த்தக அமர்வுகளாக சந்தை புதிய உச்சத்தினை தொட்டு வருகின்றது. இது முதலீட்டாளர்களின் நம்பிக்கையே சுட்டிக் காட்டுகிறது.

ரூபாய் Vs டாலர்

இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 1 வருட உச்சத்தினை தொட்டுள்ளது. இது அதிகளவிலான அன்னிய முதலீடு வரத்து, சர்வதேச சந்தைகள் எதிரொலி காரணமாகவும், கொரோனாவின் தாக்கம் குறைந்து வரும் நிலையிலும், டாலரிக்கு எதிரான ரூபாயின் மதிப்பானது அதிகரித்து, 72.50 என்ற லெவலில் உள்ளது.

என்ன காரணம்?

புதிய கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வந்தாலும், அமெரிக்க பொருளாதாரத்தினை மீட்டெடுக்க விரைவில் ஊக்கத்தொகைக்கு, அந்த நாட்டு அரசு ஒப்புதல் அளிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இது பொருளாதாரத்தினை ஊக்குவிக்கும் என்ற நம்பிக்கையை முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் இந்திய சந்தையில் அன்னிய முதலீடுகள் அதிகரித்து வருகின்றது. அதோடு இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வரும் நிலையில், பல கொரோனா தடுப்பூசி பற்றிய சாதகமான செய்திகள் வந்து கொண்டுள்ளன. ஆக இதுவும் சந்தைக்கு சாதகமாக அமைந்துள்ளது.

நிஃப்டி, சென்செக்ஸ் குறியீடுகளும்

முதலீட்டாளர்களின் இந்த நம்பிக்கையினால், நிஃப்டி சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள நிஃப்டி ஐடி, பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள், பிஎஸ்இ எஃப்எம்சிஜி, பிஎஸ்இ மெட்டல்ஸ் குறியீடுகள் தவிர, மீதமுள்ள அனைத்து இன்டெக்ஸ்களும் பச்சை நிறத்திலேயே காணப்படுகிறது. குறிப்பாக பேங்க் நிஃப்டி 3%, நிஃப்டி 50, பிஎஸ்இ சென்செக்ஸ், பிஎஸ்இ மிட்கேப் குறியீடுகள் 1% மேலாகவும், மற்றவை 1 சதவீதத்திற்கு கீழாகவும் வர்த்தகமாகி முடிவடைந்துள்ளன.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீட்டில் உள்ள ஆக்ஸிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் பைனான்ஸ், எஸ்பிஐ, இந்தஸிந்த் வங்கி, உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே ஹெச்டிஎஃப்சி லைஃப், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், டிசிஎஸ், ஹீரோ மோட்டோ கார்ப் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீட்டில் ஆக்ஸிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் பைனான்ஸ், எஸ்பிஐ, இந்தஸிந்த் வங்கி, உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், டிசிஎஸ், டெக் மகேந்திரா, ஹெச் யு எல், ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
Post Reply