ஸ்டாக் ஃப்யூச்சர்ஸ் என்றால் என்ன? இதில் முதலிடு செய்தால் லாபமா?? நஷ்டமா??

பங்கு சந்தை பற்றிய தகவல் தொகுப்பு
Forum rules
பொறுப்புத் துறப்பு

வர்த்தகம் மற்றும் சேமிப்பு தளத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் கட்டுரைகள் அல்லது செய்திகள் வர்த்தகம் மற்றும் சேமிப்பு தளத்தின் உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, இவற்றால் ஏற்படும் இழப்புகளுக்கு வர்த்தகம் மற்றும் சேமிப்பு தளம் பொறுப்பேற்காது.

காப்புரிமை மீறல்கள் இடம்பெற்றிருந்தால் அறியத்தரலாம். உடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
Post Reply
தருண்
Posts: 208
Joined: Sun Jan 10, 2021 5:49 pm

ஸ்டாக் ஃப்யூச்சர்ஸ் என்றால் என்ன? இதில் முதலிடு செய்தால் லாபமா?? நஷ்டமா??

Post by தருண் »

டெரிவேட்டிவ்ஸ் பிரிவு, பங்கு சந்தை மற்றும் ஃப்யூச்சர்ஸ் ஆகியவற்றில் வர்த்தகம் செய்வது கேஷ் மார்க்கெட்டை காட்டிலும், சற்று அபாயகரமானதே; ஏனெனில், இதில் இருக்கக்கூடிய அதிகமான எக்ஸ்போஷரே காரணம். இதனால் சந்தேகத்துக்கிடமின்றி, இதன் மூலம் கிடைக்கும் ரிட்டர்ன்களும் அதிகமாகவே இருக்கும்.

ஃப்யூச்சர்ஸ் மார்க்கெட்டைப் பற்றி புரிந்து கொள்வதற்கு முன், கேஷ் மார்க்கெட்களில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி முதலில் தெரிந்து கொள்வோம். நீங்கள் யெஸ் வங்கியிலிருந்து, ஒரு பங்கு 280 ரூபாய் என்ற வீதத்தில் 100 பங்குகளை கேஷ் மார்க்கெட்டில் 28,000 ரூபாய் செலுத்தி வாங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இப்பங்குகளை கையகப்படுத்திக் கொண்ட பின், ஒரு பங்கு 300 ரூபாய் என்ற வீதத்தில் 30,000 ரூபாய்க்கு நீங்கள் இந்த 100 பங்குகளையும் விற்கிறீர்கள். இதன் மூலம் எவ்வித மெனக்கிடலும் இன்றி 2000 ரூபாய் லாபமாக உங்களுக்குக் கிடைக்கிறது.

ஃப்யூச்சர்ஸ் மார்க்கெட்

ஃப்யூச்சர்ஸ் மார்க்கெட்டில், இதே 28,000 ரூபாய்க்கு நீங்கள் அதிகமான பங்குகளை வாங்க முடியும்; ஏனெனில், இதில் நீங்கள் மார்ஜினாக சுமார் 15% மட்டுமே செலுத்த வேண்டியிருக்கும். அதனால், மேற்கூறிய உதாரணத்தில், 28,000 ரூபாயைக் கொண்டு உங்களால் 1 தொகுதியையோ அல்லது 500 பங்குகளையோ யெஸ் வங்கியில் இருந்து வாங்க முடியும். கேஷ் மார்க்கெட்டில் கிடைத்த 2000 ரூபாய் லாபத்துடன் ஒப்பிடுகையில், இதில் சுமார் 10,000 ரூபாய் வரையிலான லாபத்தைப் பெறலாம்.

இது கொஞ்சம் ரிஸ்க் தான் பாஸ்!!!

அதாவது, இதன் மூலம் நாம் அறிந்து கொள்ள வேண்டியது யாதெனில் ஃப்யூச்சர்ஸ் மார்க்கெட்டில் அபாயமும் அதிகம், ஆதாயமும் அதிகம் என்பதே. ஏனெனில், நீங்கள் மார்ஜின் மட்டுமே செலுத்த வேண்டியுள்ளதால் நீங்கள் செலுத்தும் தொகையைக் காட்டிலும் சுமார் 6 அல்லது 7 மடங்கு மதிப்புள்ள சொத்துக்களை வாங்க இயலும்.

ஃப்யூச்சர்களின் வகைகள்

ஃப்யூச்சர்களின் பிரசித்தி பெற்ற இரு வகைகள் ஃஸ்டாக் ஃப்யூச்சர்கள் மற்றும் இன்டெக்ஸ் ஃப்யூச்சர்கள் ஆகியவையே. ஸ்டாக் ஃப்யூச்சர்களுக்கான எளிய உதாரணமாக மேற்கூறிய யெஸ் வங்கி உதாரணத்தையே எடுத்துக் கொள்ளலாம். இன்டெக்ஸ் ஃப்யூச்சர்களுக்கு எடுத்துக்காட்டாக நிஃப்டி ஃப்யூச்சரைக் கூறலாம். இதில் முதலில் நிஃப்டியை வாங்கி பின் விற்கவோ அல்லது விற்று பின் வாங்கவோ நீங்கள் அனுமதிக்கப்படுவீர்கள்.

ஒப்பந்தங்கள் தினந்தோறும் கண்காணிக்கப்படுகின்றன

ஃப்யூச்சர்ஸ் ஒப்பந்தங்கள் தின அடிப்படையில் கண்காணிக்கப்பட்டு, ஒரு நாளின் முடிவில் அந்நாளில் கிடைத்த லாபங்கள் மற்றும் நஷ்டங்கள் அக்கவுன்ட்டில் காண்பிக்கப்படும். ஏதேனும் இழப்பு ஏற்பட்டிருப்பின் அது செலுத்தப்பட்ட மார்ஜின் தொகையிலிருந்து கழிக்கப்பட்டு, அக்கவுன்ட்டில் காண்பிக்கப்படும். அதுவே லாபங்கள் ஈட்டப்பட்டிருப்பின், அத்தொகை மார்ஜின் தொகையுடன் சேர்க்கப்படும்.

ஒரு ஒப்பந்தத்தின் நிறைவு

ஃப்யூச்சர்ஸ் ஒப்பந்தம் குறிப்பிட்ட தேதிக்குள் தீர்வை செய்யப்பட வேண்டும். இந்தியாவில் ஃப்யூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்கள் ஒவ்வொரு மாதத்தின் கடைசி வியாழனன்று காலாவதியாகின்றன. உங்கள் வாழ்நாள் முழுவதும் நீங்கள் வாங்கிய பங்குகளை நீங்களே வைத்திருக்க அனுமதிக்கும் கேஷ் மார்க்கெட் போலன்றி ஃப்யூச்சர்ஸ் மார்க்கெட் அதிகபட்சமாக மூன்று மாதங்களுக்குள் அவற்றை தீர்வை செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு உங்களை ஆளாக்குகின்றன.

லாபமும் அதிகம், அபாயமும் அதிகம்!!

சுருக்கமாகச் சொல்வதானால், அதிகமான எக்ஸ்போஷரைக் கொண்டிருப்பதனாலும், அவற்றை குறிப்பிட்ட காலவரையறைக்குள் தீர்வை செய்தேயாக வேண்டிய கட்டாயத்தைக் கொண்டிருப்பதனாலும் ஃப்யூச்சர்ஸ் மார்க்கெட் மிகவும் அபாயகரமானவையாகத் திகழ்கின்றன.

-தட்ஸ்தமிழ்
Post Reply