இந்த ஃபண்டா, அந்த ஃபண்டா..? மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக் குழப்பங்கள்..! தெளிவான விளக்கங்கள்...

மியூச்சுவல் பண்ட் பற்றிய கட்டுரைகள்
Forum rules
பொறுப்புத் துறப்பு

வர்த்தகம் மற்றும் சேமிப்பு தளத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் கட்டுரைகள் அல்லது செய்திகள் வர்த்தகம் மற்றும் சேமிப்பு தளத்தின் உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, இவற்றால் ஏற்படும் இழப்புகளுக்கு வர்த்தகம் மற்றும் சேமிப்பு தளம் பொறுப்பேற்காது.

காப்புரிமை மீறல்கள் இடம்பெற்றிருந்தால் அறியத்தரலாம். உடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
Post Reply
தருண்
Posts: 208
Joined: Sun Jan 10, 2021 5:49 pm

இந்த ஃபண்டா, அந்த ஃபண்டா..? மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக் குழப்பங்கள்..! தெளிவான விளக்கங்கள்...

Post by தருண் »

மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது அண்மைக் காலமாகத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த முதலீட்டில் ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு பலவிதமான கேள்விகள். இந்த ஃபண்டை வாங்கலாமா, அந்த ஃபண்டை வாங்கலாமா எனப் பலவிதமான குழப்பங்கள். இந்தக் குழப்பங்களுக்குத் தெளிவான தீர்வுகள் இதோ...

எஸ்.ஐ.பி முதலீடா... மொத்த முதலீடா...?

மியூச்சுவல் ஃபண்டில் மொத்த முதலீடு எல்லோருக்கும் இயலாத காரியம். அடுத்து பணத்தை வங்கி சேமிப்பு அல்லது ஆர்.டி மூலம் சேமித்து மியூச்சுவல் மொத்தமாக ஃபண்டில் முதலீடு செய்வதைவிட பல நேரங்களில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் எஸ்.ஐ.பி முறையில் நேரடியாக முதலீடு செய்வது லாபகரமாக இருக்கும்.

பங்குச் சந்தை விரைவில் இறக்கம் காணும் எனக் கணிக்கப்பட்டிருந்தால் அல்லது நம்பினால், லிக்விட் ஃபண்டில் மொத்த முதலீட்டைப் போட்டு விட்டுவிட்டு, அதிலிருந்து சிஸ்டமேட்டிக் டிரான்ஸ்ஃபர் பிளான் (எஸ்.டி.பி) முறையில் ஈக்விட்டி ஃபண்டுக்கு முதலீட்டை மாற்றுவது லாபகரமாக இருக்கும். முதலீட்டாளர்களுக்கு டென்ஷன் இல்லாமலும் இருக்கும்.

எனவே, சூழ்நிலையைப் பொறுத்து எஸ்.ஐ.பி முறையிலும் மொத்தமாகவும் முதலீடு செய்து வருவது லாபகரமாக இருக்கும்.

டைவர்சிஃபைடு ஃபண்டா... செக்டார் ஃபண்டா?

அண்மைக் காலத்தில் பல பார்மா மற்றும் கமாடிட்டி ஃபண்டுகள் அருமையான வருமானத்தைத் தந்திருப்பதைப் பார்க்கும்போது பலருக்கும் இந்த ஃபண்டுகளில் முதலீடு செய்ய ஆசை வரும். ஆனால், இது போன்ற செக்டார் ஃபண்டுகளில் எப்போது நுழைய வேண்டும், எப்போது வெளியேற வேண்டும் என்பது தெரிந்திருந்தால் மட்டுமே லாபம் பார்க்க முடியும்.

கோவிட்-19 பிரச்னை ஆரம்பித்த போது வேகமாக ஏற்றம் காண ஆரம்பித்த பார்மா மற்றும் ஐ.டி ஃபண்டுகள் கோவிட் முதல் அலை முடிவுக்கு வரும் நிலையில் இறக்கம் காண ஆரம்பித்தன. இப்போது இரண்டாம் அலை வேகமெடுத்து வருவதால், மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்திருக்கின்றன. அந்த வகையில் துறைசார்ந்த அறிவு மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படும் திறன் கொண்டவர்களுக்கு செக்டார் ஃபண்டுகள் ஏற்றவையாக இருக்கும்.

மற்றவர்களுக்கு டைவர்சிஃபைடு ஃபண்ட் எனப்படுகிற ஃபிளெக்ஸிகேப் ஃபண்டுகள் (அனைத்து மார்க்கெட் கேப்பிடலைசேஷன் கொண்ட நிறுவனப் பங்குகளில் முதலீடு பிரித்து மேற்கொள்ளப்படும்), மல்ட்டிகேப் ஃபண்டுகள் (லார்ஜ், மிட், ஸ்மால்கேப் நிறுவனப் பங்குகளில் குறைந்தபட்சம் 25% முதலீடு செய்யப்படும்) ஏற்றவையாக இருக்கும்.

பொதுவாக, செக்டார் ஃபண்டுகள் அதிக ரிஸ்க் கொண்டவையாக இருக்கும். டைவர்சிஃபைடு ஃபண்டுகளில் ஓரளவுக்கு ரிஸ்க் குறைவாக இருக்கும். நிதி ஆலோசகர்கள், பெரும்பாலும் சிறு முதலீட்டாளர்களுக்கு டைவர்சிஃபைடு ஃபண்டுகளையே பரிந்துரை செய்கிறார் கள். அப்படியே செக்டார் ஃபண்டுகளைப் பரிந்துரை செய்தாலும் அவை முதலீட்டுக் கலவையில் சுமார் 15 சதவிகிதத்துக்குள் இருக்கும்படி பார்த்துக்கொள்கிறார்கள்.

Image

டைவர்சிஃபைடு ஃபண்டா... ஃபோகஸ்ட் ஃபண்டா?

டைவர்சிஃபைடு ஃபண்டுகளில் திரட்டப்படும் சுமார் 50 நிறுவனப் பங்குகளில் பிரித்து முதலீடு செய்யப்படும் நிலையில் ஃபோகஸ்டு ஃபண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 25-30 நிறுவனப் பங்குகளில் மட்டுமே முதலீடு செய்யப்படு கிறது. இதனால், டைவர்சிஃபைடு ஃபண்ட் ரிஸ்க் குறைவானதாகவும், ஃபோகஸ்டு ஃபண்ட் ரிஸ்க் அதிகமானதாகவும் இருக்கிறது.

அதே நேரத்தில், ஃபண்டின் போர்ட்ஃபோலியோவில் மிக அதிக பங்குகள் இருந்து ஓவர் டைவர்சிஃபிகேஷனாக இருந்தால், அந்த ஃபண்டை நிர்வகிப்பது ஃபண்ட் மேனே ஜருக்கு கஷ்டமான காரியமாக இருக்கும்.

சந்தை ஏற்றத்தில் ஃபோகஸ்டு ஃபண்டுகள் அதிக வருமானம் கொடுக்க வாய்ப்பிருக்கிறது. ஏற்ற இறக்கச் சந்தையில் டைவர்சிஃபைடு ஃபண்டுகள் அதிக வருமானம் கொடுக்க வாய்ப்பிருக்கிறது. அந்த வகையில் உங்களின் முதலீட்டுக் கலவையில் இந்த இரண்டு வகை ஃபண்டு களையும் சேர்த்துக்கொள்வது மூலம் சந்தையின் எந்த நிலை யிலும் உங்களின் முதலீட்டுக் கலவையின் வருமானம் அதிக இறக்கம் இல்லாமல் இருக்கும்.

குரோத் ஆப்ஷனா... டிவிடெண்ட் ஆப்ஷனா..?

ஒரு காலத்தில் வரி இல்லா டிவிடெண்ட் என்பதால், மியூச்சுவல் ஃபண்டில் பெரும் பாலானோர் டிவிடெண்ட் ஆப்ஷனையே தீர்வு செய்தனர். அதன்பிறகு டிவிடெண்ட் விநியோக வரி கொண்டு வரப்பட்டதால் அதன் மவுசு சற்றுக் குறைந்தது. அண்மைக் காலத்தில் டிவிடெண்ட் வருமானத்துக்கு முதலீட்டாளர் அவரின் வருமான வரம்புக்கு ஏற்ப (5%, 20%, 30%) வரி கட்ட வேண்டும் எனக் கொண்டு வரப்பட்டதால், அதன் மவுசை முழுமையாக இழந்துள்ளது.

அந்த வகையில் குரோத் ஆப்ஷன் லாபகரமாக இருக்கிறது. ஈக்விட்டி ஃபண்டுகளில் ஓராண்டுக்குப் பிறகு யூனிட்டு களை விற்று லாபம் பார்க்கும் போது நிதி ஆண்டில் ரூ.1 லட்சம் மூலதன ஆதாயத்துக்கு வரி இல்லை. அதற்கு மேற்படும் ஆதாயத்துக்கு 10% வரிக் கட்டினால் போதும். கடன் ஃபண்டுகளில் மூன்றாண்டுக்கு பிறகு யூனிட்களை விற்று லாபம் ஈட்டினால், பணவீக்க விகித சரிக்கட்டலுக்குப் பிறகு 20% கட்டினால் போதும் என்பதால், குரோத் ஆப்ஷன் லாபகர மானதாக இருக்கிறது.

மேலும், நீண்டகால முதலீடு என்கிறபோது குரோத் ஆப்ஷனைத் தேர்வு செய்தால் தான் முதலீடு பெரிதாக வளரும். இடையிடையே டிவிடெண்ட் வழங்கப்படுவதால், என்.ஏ.வி மதிப்பு குறைவாக இருக்கும். இதனால், இறுதியாகக் கிடைக்கும் தொகை குறைவாக இருக்கும். இடையில் கிடைக்கும் டிவிடெண்ட் தொகைக்கும் வரி கட்ட வேண்டும் என்பதால், டிவிடெண்ட் ஆப்ஷனில் லாபம் பெரிதாக இருக்காது.

ஆக்டிவ் ஃபண்டா... பேசிவ் ஃபண்டா..?

ஆக்டிவ் ஃபண்ட் என்பது ஃபண்ட் மேனேஜரின் விருப்பத் துக்கு ஏற்ப முதலீட்டுக்கான நிறுவனப் பங்குகளை தேர்வு செய்வதாக உள்ளது. இதனால், ஃபண்ட் மேனேஜர் ஆக்டிவ் வாகச் செயல்பட்டு முதலீட் டாளர்களுக்கு அதிக வருமானம் கொடுக்க வாய்ப்பிருக்கிறது.

பேசிவ் ஃபண்டுகளில் சென்செக்ஸ், நிஃப்டி போன்ற குறியீடுகளைப் பின்பற்றி அவற்றில் இடம் பெற்றிருக்கும் பங்குகளின் விகிதாசாரத்துக்கேற்ப முதலீடு செய்யப்படும். இவை இண்டெக்ஸ் ஃபண்டுகள் அல்லது இ.டி.எஃப்-க்கள் (எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்டுகள்) எனப்படும். இவற்றின் வருமானம், எந்தக் குறியீட்டில் அமைந்திருக்கிறதோ, அதன் வருமானத்தை ஒட்டி இருக்கும்.

அண்மைக் காலத்தில் இந்தியப் பங்குச் சந்தை அதிக ஏற்ற இறக்கத்தில் இருப்பதால், பல ஆக்டிவ் ஃபண்டுகளைவிட பேசிவ் ஃபண்டுகள் அதிக வருமானத்தை அளித்திருக்கின்றன. மேலும், ஆக்டிவ் ஃபண்டுகளில் ஃபண்ட் மேனேஜர்களுக்கு அதிக வேலை இருப்பதால், செலவு விகிதம் அதிகமாக இருக்கிறது. பேசிவ் ஃபண்டுகளில் ஃபண்ட் மேனேஜர்களுக்குப் பெரிய வேலை இல்லை என்பதால், செலவு விகிதம் மிகவும் குறைவு.

இ.டி.எஃப்-களில் முதலீடு செய்ய டீமேட் கணக்கு தேவை. ஃபண்ட் மேனேஜர் மீது அதிக நம்பிக்கை வைத் திருப்பவர்கள் ஆக்டிவ் ஃபண்டுகளிலும் குறியீடுகளின் செயல்பாடுகள் மீது அதிக நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் இண்டெக்ஸ் ஃபண்ட் அல்லது இ.டி.எஃப்களில் முதலீடு செய்யலாம்.

இண்டெக்ஸ் ஃபண்டா... இ.டி.எஃப் ஃபண்டா?

ஒருவர் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்குப் புதியவர், அவர் இதுவரை பங்குச் சந்தையில் முதலீடு செய்யவில்லை என்கிறபட்சத்தில் அவருக்கு டீமேட் கணக்கு இருக்க வாய்ப்பில்லை. அது போன்றவர்கள் இண்டெக்ஸ் ஃபண்டு களில் முதலீடு செய்யலாம். இதில் முதலீடு செய்ய பான் மற்றும் ஆதார் எண் இருந்தால் போதும்.

ஏற்கெனவே பங்கு முதலீடு செய்து வருகிற ஒருவர் டீமேட் கணக்கு வைத்திருப்பார். அவர் டீமேட் கணக்குப் பராமரிப்புக் கட்டணம் ஆண்டுக்கு ரூ.300 முதல் ரூ.500 செலுத்தி வருவார். அதுபோன்ற வர்கள் இ.டி.எஃப்-களில் முதலீடு செய்யலாம். இண்டெக்ஸ் ஃபண்டை விட இ.டி.எஃப்-களில் செலவு விகிதம் சிறிது குறைவாக இருக்கும்.

கோல்டு இ.டி.எஃப்... கோல்டு சேவிங்ஸ் ஃபண்டா..?

இது கிட்டத்தட்ட இண்டெக்ஸ் ஃபண்ட், இ.டி.எஃப்-க்கு உள்ள வித்தியாசம் போல்தான். தங்கத்தை முதலீட்டு நோக்கில் கருதி குறைவாக முதலீடு செய்பவர்கள் கோல்டு சேவிங்ஸ் ஃபண்டில் முதலீடு செய்யலாம். டீமேட் கணக்கு வைத்திருப்பவர்கள், தங்கத்தில் லட்சக்கணக்கான தொகையை முதலீடு செய்யத் திட்டமிட்டிருப் பவர்கள் கோல்டு இ.டிஎ.ஃப்-களில் முதலீடு செய்யலாம்.

கோல்டு இ.டி.எஃப்-ல் செலவு விகிதம் குறைவு என்பதுடன், கோல்டு சேவிங்ஸ் ஃபண்டைவிட ஓரிரு சதவிகிதம் அதிக வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.

கடன் ஃபண்டா... ஈக்விட்டி ஃபண்டா..?

பலருக்கும் மியூச்சுவல் ஃபண்டில் கடன் ஃபண்ட், கலப்பின ஃபண்ட், ஈக்விட்டி ஃபண்ட், இதில் எதில் முதலீடு செய்வது என்பதில் குழப்பம் இருக்கும். இவற்றில் எதில் எல்லாம் ஒருவர் முதலீடு செய்ய வேண்டும் என்பதில் இரண்டு விஷயங்கள் உள்ளன. ஒன்று முதலீட்டாளரின் ரிஸ்க் எடுக்கும் திறன். அடுத்து முதலீட்டுக் காலம் ஆகும்.

ரிஸ்க் எடுக்கும் திறன் குறைவாகவும் முதலீட்டுக் காலம் குறுகியதாகவும் இருந்தால் கடன் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். ரிஸ்க் எடுக்கும் திறன் நடுத்தர அளவு, முதலீட்டுக் காலமும் நடுத்தர காலம் என்றால், ஹைபிரிட் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். ரிஸ்க் எடுக்கும் திறன் அதிகம், முதலீட்டுக் காலமும் அதிகம் எனில் ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.

குழப்பங்கள் தீர்ந்து, உங்கள் எதிர்கால இலக்கை நிறைவேற்றிக் கொள்ள மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய ஆரம்பியுங்கள்!

புதிய ஃபண்டா... பழைய ஃபண்டா..?

புது மாப்பிள்ளை, புது பெண் மாதிரி புதிய ஃபண்ட் வெளியீடு (என்.எஃப்.ஓ) இருக்கிறது. என்.எஃப்.ஓ-வை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களும் மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்கள் அதிகம் பிரபலப்படுத்துவதால், அதன் மீது முதலீட்டாளர்களுக்கு ஈர்ப்பு இருக்கிறது. அதுவும் யூனிட்டுகள் முகமதிப்பான 10 ரூபாயிலேயே கிடைப்பதால், பலரும் புதிய ஃபண்டுகளை விரும்புகிறார்கள். ஆனால், அது தவறான புரிந்துகொள்ளல். எந்த ஃபண்டாக இருந்தாலும் அது என்ன வருமானம் கொடுக்கும் என்பதுதான் முக்கியம்.

ஏற்கெனவே செயல்பட்டுவரும் ஃபண்டுகளின் வருமானச் செயல்பாடுகள் தெரியும். கடந்த கால வருமானம் எதிர்காலத்தில் நிச்சயமாகக் கிடைக்குமா எனில், உறுதி இல்லை. ஆனாலும், ஓரளவுக்கு அதேபோல் செயல்படும் என எதிர்பார்க்கலாம். அதற்காக புதிய ஃபண்ட் முதலீடு வேண்டாம் என்று சொல்லவில்லை. இதுவரை இல்லாத புதிய கருத்தின் (தீம்) அடிப்படையில் ஒரு என்.எஃப்.ஓ வருகிறது. அது எதிர்காலத்தில் நல்ல வருமானம் கொடுக்கும் எனில், அதில் தாரளமாக முதலீடு செய்யலாம். மற்றபடி டிராக் ரெக்கார்டு உள்ள பழைய ஃபண்டுகளைத் தேர்வு செய்வதே புத்திசாலிதனம் மற்றும் லாபகரமாக இருக்கும்.

நன்றி
ந.விகடன்
Post Reply