ஆன்லைனில் கடன்... கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சங்கள்...! எச்சரிக்கை டிப்ஸ்...

வங்கி மற்றும் கடன் ஆகியவை பற்றிய கட்டுரை தொகுப்பு
Forum rules
பொறுப்புத் துறப்பு

வர்த்தகம் மற்றும் சேமிப்பு தளத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் கட்டுரைகள் அல்லது செய்திகள் வர்த்தகம் மற்றும் சேமிப்பு தளத்தின் உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, இவற்றால் ஏற்படும் இழப்புகளுக்கு வர்த்தகம் மற்றும் சேமிப்பு தளம் பொறுப்பேற்காது.

காப்புரிமை மீறல்கள் இடம்பெற்றிருந்தால் அறியத்தரலாம். உடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
Post Reply
தருண்
Posts: 208
Joined: Sun Jan 10, 2021 5:49 pm

ஆன்லைனில் கடன்... கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சங்கள்...! எச்சரிக்கை டிப்ஸ்...

Post by தருண் »

டிஜிட்டல்மயமாகி வரும் உலகில் எல்லாமே ஆன்லைன் மூலம்தான் நடைபெறுகிறது. கொரோனா இரண்டாம் அலை வேகமாகப் பரவிவருவதால், வாடிக்கையாளர்கள் வருவதைப் பெரும்பாலான வங்கிகளும், நிதி நிறுவனங்களும் குறைக்க ஆரம்பித்துள்ளன. கடன் சார்ந்த விஷயத்திலும், விரைவுக் கடன், உடனடிக் கடன், ஆப் மூலமான கடன் என வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை ஆன்லைன் வாயிலாக வழங்குவதை அவர்கள் அதிகப்படுத்தி யிருக்கிறார்கள். இதனால் கடன் கிடப்பதற்கான நேரமும் மிச்சமாகிறது.

ஆன்லைன் மூலம் கடனுக்கு விண்ணப்பிப்பதில் உள்ள விஷயங்கள் குறித்தும், கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்தும் தனியார் வங்கி அதிகாரியான மணியன் கலியமூர்த்தி யிடம் பேசினோம்.

Image

“கொரோனா இரண்டாம் அலை காலத்தில் டெபாசிட் பணத்தை எடுப்பது தொடங்கி எதுவாக இருந்தாலும் ஆன்லைன் மூலமே நிறைவேற்றிக் கொள்கிறார்கள். குறிப்பாக, கடனுக்கான விண்ணப் பங்கள் ஆன்லைன் வாயிலாக வருவது அதிகரித்துள்ளது. இதற்கான ஆவணங்களையும் ஆன்லைன் வாயிலாகவே பெறுவதால், வாடிக்கை யாளர் மற்றும் வங்கி அலுவலர்களுக்கு இடையேயான நேர விரையம் இல்லாமல் போகிறது. அதே சமயம், தேவையும், மக்களின் கூட்டமும் எங்கு அதிகமாக இருக்கிறதோ, அங்குதான் மோசடி செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும். அதனால் வங்கி வாடிக்கை யாளர்கள் கவனமுடன் இருப்பது அவசியம்” என்றவர், மேலும் தொடர்ந்தார்.

ஆன்லைன் பாதுகாப்பானதா?

‘‘நீங்கள் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் வலைதளம் அல்லது அந்த வங்கி வெளியிட்டிருக்கும் ஆப்ளிகேஷனைத் தவிர்த்து, மற்ற வங்கி அல்லாத ஆன்லைன் வலை தளங்கள் மற்றும் ஆப்ளிகேஷன்களில் கடன் கேட்டு விண்ணப்பிக்க வேண்டாம். வங்கி சார்ந்த வலைதளம் அல்லது ஆப் எனில், ஏற்கெனவே உங்களுடைய வங்கிக் கணக்கு விவரங்கள் அவர்களிடம் இருக்கும். அதனால் தேவைப்படும் தொகை மற்றும் சில குறிப்பிட்ட விஷயங்களை மட்டும் தெரிவித்தால் போதுமானதாக இருக்கும். ஆனால், புதிய நிதி நிறுவனம் அல்லது அந்த நிறுவனம் சார்ந்த ஆப்ளிகேஷன் எனில், அனைத்து விவரங்களையும் உள்ளீடு செய்ய வேண்டியிருக்கும். அந்த வலைதளம் பாதுகாப்பானதா அல்லது பாதுகாப்புக் குறைவானதா எனக் கணிக்க முடியாது.

ஆன்லைன் லிங்க் ஆபத்து...

இப்போதெல்லாம் தினம் குறைந்தது ஐந்து தொலைபேசி அழைப்பாவது கடன் வேண்டுமா எனக் கேட்டு வருகிறது. இதில் எத்தனை பேர் வங்கியிலிருந்து போன் செய்கிறார்கள், எத்தனை பேர் மோசடிப் பேர்வழிகள் என்பது பேசப் பேசத்தான் தெரியும். வங்கி யிலிருந்து போன் செய்திருந்தால், உங்களுடைய வங்கி சார்ந்த விவரங் களை அவர்கள் கேட்காமலேயே, அவர்களே தெரியப்படுத்தி கடனுக்கான ஆஃபர்களை தெரிவிப் பார்கள். இதே மோசடிக் கும்பலாக இருந்தால், உங்களுடைய நம்பருக்கு ஒரு லிங்க் அனுப்பப்படும் அதை கிளிக் செய்யுங்கள் என ஏதாவது ஒரு விஷயத்தைப் பேசி நம்மை குழப்பத்துக்கு ஆளாக்கி, நமக்கே தெரியாமல் நம்முடைய வங்கி சார்ந்த விவரங்களை எடுத்துக்கொள்வார்கள். எனவே, கவனம்.

அதேபோல, கடன் தருவதாகச் சொல்லி வரும் எஸ்.எம்.எஸ் மற்றும் இ-மெயில் லிங்குகளையும் நம்ப வேண்டாம். இது மோசடி நிறுவனங் களின் வேலையாகக்கூட இருக்கலாம்.

கடன் காப்பீடு கட்டாயம்...

ஆன்லைனில் கடன் வாங்கி னாலும், அந்தக் கடனுக்கு இணையான தொகைக்கு ஆயுள் காப்பீடு எடுத்துக்கொள்வது அவசியம். குறிப்பாக, வீட்டுக் கடன் வாங்கும்போது, அந்தக் கடன் தொகைக்கு இணையாக அல்லது கடன் தொகை குறையக் குறைய அதற்கு இணையான கவரேஜ் அளிக்கும் டேர்ம் பிளான் எடுத்துக்கொள்வது கட்டாயம். டேர்ம் பிளான் என்கிறபோது பிரீமியம் குறைவாக இருப்பதுடன், கவரேஜ் தொகையும் அதிகமாக இருக்கும்.

கார் கடன் வாங்கினாலும், தனிநபர் கடன் வாங்கினாலும் ஆயுள் காப்பீடு எடுப்பது கட்டாயம். தேய்மானம் மற்றும் பழைய கார் என்பதால், அதன் மதிப்பு வேகமாகக் குறைந்துவிடும். குடும்பத் தலைவர் திடீரென மறைந்துவிடும்போது காரை விற்றுகூட முழுக் கடன் தொகையைக் கட்ட முடியாத சூழ்நிலை உருவாகும் என்பதை நினைவில்கொள்வது நல்லது.

கடனுக்கான வட்டியைக் கவனியுங்கள்...

ஆன்லைனில் கடனுக்காக விண்ணப் பிக்கும்போது, கண்ணுக்கு பளிச்சென்று தெரிகிற மாதிரி வட்டி விகிதத்தைக் குறிப்பிட்டிருப்பார்கள். உங்களுக்குக் கொடுக்கும் கடனுக்கான வட்டி விகிதம் அதுதானா அல்லது வேறு வட்டி விகிதத்தை காட்டி, உங்களுக்கு அதிக வட்டியை விதிக்கிறார்களா என்பதைப் பரிசோதிக்க வேண்டும். உண்மையிலேயே அது குறைவான வட்டிதானா, அந்த வட்டியை எந்த முறையில் கணக்கிடுகிறார்கள் (ஃப்ளாட் ரேட், குறையும் அசலுக்கான வட்டி) என்பதைக் கவனியுங்கள்.

விதிமுறைகளை முழுமையாகப் படிக்கவும்...


கடன் சார்ந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை (Read the terms and conditions) முழுமையாகப் படியுங்கள். அறை குறையாக படித்து ஆபத்தில் சிக்கிக்கொள்ள வேண்டாம். திருப்பிச் செலுத்தும் காலம், வட்டி விகிதம், செயல் பாட்டுக் கட்டணம் மற்றும் இதர கட்டணங்களில் சொல்லப் பட்டிருக்கும் விஷயங்கள் என அனைத்தையும் முழுமையாகப் படித்து தெரிந்துகொள்வது மிக முக்கியம்.

ஆன் லைனில் சொல்லப் பட்டிருக்கும் விஷயங்களில் சந்தேகம் எனில், சம்பந்தப்பட்ட வங்கி களுக்கு அல்லது வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்கு போன் செய்து விவரங்களைக் கேட்டு தெரிந்துகொள்வது முக்கியம்” என்றார்.

உஷார் கடன்தாரர்களே!

கண்டபடி கடன் வாங்க வேண்டாம்!


கடன் வாங்குபவர்களுக்கு அதைத் திருப்பிச் செலுத்தும் பொறுப்பு இருக்கிறது. ஆன்லைன் மூலம் எளிதில் கடன் கிடைக்கிறது என்பதற்காக கண்டபடி கடன் வாங்கி கடன் வலையில் சிக்கிக்கொள்ளாதீர்கள். இது உங்களின் நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை நிச்சயம் பாதிக்கும். இப்போதுள்ள கடனைச் சரியாகக் கட்ட வில்லையெனில், கிரெடிட் ஸ்கோர் குறைந்து எதிர்காலத்தில் கடன் வாங்க முடியாத நிலை ஏற்படும். எல்லாவற்றுக்கும் மேலாக, கடன் வாங்கி நிலைமையைச் சமாளிக்கலாம் என்று நினைக்காமல், எதிர்காலத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள கொஞ்சம் கொஞ்சமாக பணத்தைச் சேர்த்து வைப்பது அவசியம். எதிர்காலத்தில் பெரிய அளவில் நன்மை விளைக்கக்கூடிய கடன்களை மட்டுமே ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து வாங்குங்கள்!


நன்றி
ந.விகடன்
Post Reply