சுத்தமான ஃபில்ட்டர் ஜாலியான பயணம்! ஏர் ஃபில்ட்டர் கிளீனிங்!

வாகன உலகம்
Forum rules
பொறுப்புத் துறப்பு

வர்த்தகம் மற்றும் சேமிப்பு தளத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் கட்டுரைகள் அல்லது செய்திகள் வர்த்தகம் மற்றும் சேமிப்பு தளத்தின் உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, இவற்றால் ஏற்படும் இழப்புகளுக்கு வர்த்தகம் மற்றும் சேமிப்பு தளம் பொறுப்பேற்காது.

காப்புரிமை மீறல்கள் இடம்பெற்றிருந்தால் அறியத்தரலாம். உடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
Post Reply
தருண்
Posts: 250
Joined: Sun Jan 10, 2021 5:49 pm

சுத்தமான ஃபில்ட்டர் ஜாலியான பயணம்! ஏர் ஃபில்ட்டர் கிளீனிங்!

Post by தருண் »

மனிதனின் நுரையீரல் போன்றது வாகனத்தின் ஏர் ஃபில்ட்டர். இன்ஜினுக்குத் தேவைப்படும் காற்றை, இதுதான் வடிகட்டிச் சுத்தம் செய்து அனுப்புகிறது. காற்றுக்கு வாகனத்தின் இயக்கத்தில் மிக முக்கியப் உண்டு. அதன் முக்கியத்துவம், பராமரிப்பு பற்றிச் சொல்கிறார், கோவையைச் சேர்ந்த மெக்கானிக் ஆறுச்சாமி.

''நம் நாட்டில், பெரும்பாலானோர் இரு சக்கர வாகனத்தில்தான் பயணிக்கிறோம். சில சாலைகள் பைக் ஓட்ட மிகவும் சிரமமாக இருக்கும். சாலைப் பராமரிப்பு வேலைகள் நடக்கும்போது, புழுதி கிளம்பும். அந்தப் புழுதியைக் கடந்து வீட்டுக்குச் சென்று, முகத்தைக் கழுவி வெள்ளைத் துணியால் துடைத்தால், நம் முகத்தில் படிந்திருக்கும் அழுக்கு, கறுப்பு நிறத்தில் இருக்கும். அப்போது அரசாங்கத்தைத் திட்டிவிட்டு அந்தக் கணமே அதை மறந்துவிடுவோம்.

ஆனால், தினமும் இதே போன்ற புழுதிக் காற்றை இழுத்துச் சுத்தம் செய்து... கார்புரேட்டருக்கு அனுப்பும் வேலையைச் செய்கிறது இந்த ஏர் ஃபில்ட்டர்.

Image

ஏர் ஃபில்ட்டரில் இரண்டு வகை உண்டு. ஒன்று, ஸ்பாஞ்ச் ஃபில்ட்டர். மற்றொன்று, பேப்பர் ஃபில்ட்டர். இதில், பேப்பர் ஏர் ஃபில்ட்டரைப் பராமரிப்பது மிகவும் சுலபம்.

பேப்பர் ஃபில்ட்டர் கொண்ட வாகனங்களில், உதாரணமாக ஹோண்டா யூனிகார்ன் பைக்கில் ஏர் ஃபில்ட்டர் சீட்டுக்குக் கீழே பொருத்தப்பட்டு இருக்கும். அதை எளிதாக வெளியே எடுத்து ஏர் கம்ப்ரஸர் மூலம் சுத்தம் செய்துவிடலாம்.

ஆனால், ஸ்பாஞ்ச் கொண்ட ஏர் ஃபில்ட்டரை வெளியே எடுத்து, பெட்ரோல் வாஷ் செய்து, உலரவைத்து திரும்பிப் பொருத்த சுமார் அரை மணி நேரம் ஆகும். ஆனாலும், இதை அவ்வளவு துல்லியமாகச் சுத்தம் செய்ய முடியாது.

ஸ்பாஞ்ச் ஃபில்ட்டர்களை பெட்ரோல் கொண்டு வாஷ் செய்யலாம் அல்லது பிரஷ் கொண்டும் சுத்தம் செய்யலாம்.
எக்காரணத்தைக்கொண்டும் பெட்ரோலை சீக்கிரமாக உலர வைக்க வேண்டும் என்பதற்காக ஸ்பாஞ்சைப் பிழியக் கூடாது, இது ஏர் ஃபில்டரில் உள்ள துவாரங்களை விரிவடையவைக்கும். இதனால், அதன் ஆயுட்காலம் முடியும் முன்பே மாற்ற வேண்டிய சூழல் ஏற்படும்.

Image

ஒருவர் வாகனத்தைத் தினமும் சுத்தமாக வைத்திருந்தால, ஏர் ஃபில்ட்டரின் ஆயுள்காலம் கூடும். இதனால், வாகனத்தின் மைலேஜ் மற்றும் பெர்ஃபாமென்ஸில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கார்புரேட்டரில் அழுக்கு சேரும் வாய்ப்பும் இருக்காது. இதனால், கார்புரேட்டர் கிளீனிங் செலவு மிச்சம்.

பைக்கை வெளிப்புறத்தில் மட்டும் சுத்தமாக வைத்திருக்காமல், ஏர் ஃபில்ட்டர் இருக்கும் பகுதியும் சுத்தமாக இருக்கிறதா என்று பரிசோதிப்பது அவசியம்.

ஏர் ஃபில்ட்டர் அருகில் எந்தவிதமான பேப்பரோ, துணியோ வைக்கக் கூடாது. பைக் இயங்கும்போது காற்றை உள்ளே இழுக்கும். அப்போது இந்த மாதிரியான பொருட்களால் தடை ஏற்படும். சமயங்களில் பைக் இன்ஜின் நின்றுவிடும்.
ஏர் ஃபில்ட்டர் சுத்தம் இல்லாததைக் கண்டுபிடிக்க, சைலன்ஸரில் இருந்து அதிக கரும்புகை வெளிபடுதல், அடைப்பு ஏற்படுதல் போன்றவற்றை அறிகுறிகளாகச் சொல்லலாம்.

-விகடன்
Post Reply