பறிபோகும் வேலை... ஆபத்திலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்? - அலுவலக ஊழியர்கள் கவனத்துக்கு...

பொதுவான தலைப்பில் உள்ள கட்டுரைகள் இடம் பெறும் பகுதி
Forum rules
பொறுப்புத் துறப்பு

வர்த்தகம் மற்றும் சேமிப்பு தளத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் கட்டுரைகள் அல்லது செய்திகள் வர்த்தகம் மற்றும் சேமிப்பு தளத்தின் உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, இவற்றால் ஏற்படும் இழப்புகளுக்கு வர்த்தகம் மற்றும் சேமிப்பு தளம் பொறுப்பேற்காது.

காப்புரிமை மீறல்கள் இடம்பெற்றிருந்தால் அறியத்தரலாம். உடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
Post Reply
தருண்
Posts: 208
Joined: Sun Jan 10, 2021 5:49 pm

பறிபோகும் வேலை... ஆபத்திலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்? - அலுவலக ஊழியர்கள் கவனத்துக்கு...

Post by தருண் »

Image

கொரோனாவைவிட மக்களை அதிக அளவுக்கு பயமுறுத்தியது ஆட்குறைப்பு நடவடிக்கைதான். ‘பேண்டமிக்’ நேரத்தில் மட்டுமல்ல, வேலை பார்க்கும் நிறுவனத்தின் பொருளாதாரத்தில் ஏற்படுகிற இறக்கம், பங்குச் சந்தையில் அதனுடைய பங்குகளின் விலை சரிவது, அப்டேட்டடாக சந்தைக்கு புதுப் பொருள்கள் வருவது என்று பல இக்கட்டான நேரங்களில் நிறுவனங்கள் இந்தக் கடினமான முடிவை எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும். இதுபோன்ற நேரங்களில் உங்கள் வேலையைக் காப்பாற்றிக்கொள்ள நீங்கள் செய்ய வேண்டியவை என்ன என்பது குறித்து மூத்த மனிதவள மேம்பாட்டாளர் ஜாஃபர் அலி சொல்கிறார்...

நால்வரில் நீங்கள் யார்?

‘‘ஒரு நிறுவனம் தன்னுடைய பணியாளர்களை ஸ்டார் பர்ஃபாமர்ஸ், ஹை அச்சீவர்ஸ், அச்சீவர்ஸ், பிலோ அச்சீவர்ஸ் என்று நான்காகப் பிரித்து வைத்திருக்கும். ஆட்குறைப்பு செய்ய வேண்டிய நிலை வந்தால், நான்காவது இடத்தில் இருப்பவர்களைத்தான் முதலில் தூக்கும். நிறுவனங்களைப் பொறுத்தவரை, பிலோ அச்சீவர்ஸ் என்பவர்கள் அர்ப்பணிப்பு உணர்வில்லாதவர்கள். அதனால், நிறுவனத்துக்கும் உங்களுடைய தலைமைக்கும் தெரிகிற அளவுக்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் வேலை பாருங்கள்.

தீண்டத்தகாதவர்களாக இருங்கள்!

உங்கள் வேலைக்கான அறிவை அப்டேட் செய்து கொண்டே இருங்கள். கூடவே, உங்கள் துறை சார்ந்த லேட்டஸ்ட் டெக்னாலஜியில் உங்கள் நிறுவனத்துக்குத் தேவையானதையும் தாண்டி தெரிந்து வைத்திருங்கள். அப்போதுதான் ஆட்குறைப்பு செய்கிற முடிவுக்கு நிறுவனம் வந்தாலும், அது உங்களை மட்டும் தீண்டாது.

ஒரு செஃப் போல இருங்கள்!

எல்லோராலும் தலைமைப் பதவியில் உட்கார முடியாது. ஏனென்றால் அந்தப் பதவிக்கு சில இருக்கைகள் மட்டும்தான் இருக்கும். அதனால், நீங்கள் வேலைபார்க்கும் நிறுவனத்தில் பத்தோடு பதினொன்றாவது நபராக இல்லாமல் முக்கியமானவராக இருங்கள்.

உதாரணமாக, ஒரு செஃப்போல இருங்கள். ஒரு ஹோட்டலில் தலைமைப் பொறுப்பில் எத்தனை பேர் இருந்தாலும், வாடிக்கையாளர்களைக் கட்டி இழுத்து வருவது செஃப்களின் கைமணம்தான். எத்தனை தலைமைகள் இருந்தாலும் இப்படிப்பட்ட முக்கியமானவர்களை நம்பித்தான் நிறுவனங்கள் இயங்கும். வேலைபார்க்கும் நிறுவனத்தில் நீங்கள் அப்படிப்பட்ட முக்கியமானவராக இருந்தால், ஆட்குறைப்பு என்ற வார்த்தை யைக் கண்டு நீங்கள் பயப்பட வேண்டிய அவசியமே இருக்காது.

வேலைக்காரன்டா’வாக இருங்கள்!

‘யார் வேண்டுமானாலும் அந்த வேலையைச் செய்யலாம்’ என்ற இடத்தில் இருப்பவர்கள்தாம் ஆட்குறைப்பின் ஈஸி டார்கெட். இதுவே ‘அவன் வேலைக்காரன்டா’ என்று பாராட்டு வாங்கியவர்கள் இந்த லிஸ்ட்டில் சிக்கவே மாட்டார்கள். அதனால், ‘இந்த வேலையை இவர்/இவங்ககிட்ட கொடுத்தா பர்ஃபெக்ட் அவுட்புட் கிடைக்கும்’ என்று பெயரெடுக்கிற அளவுக்குத் தனித் தன்மையுடன் இருங்கள்.

தேவையானவர்களாக இருங்கள்!


ஒரு நிறுவனம் நெருக்கடியில் இருக்கும்போதுதான் ஆட்குறைப் பில் இறங்கும். இது நிகழ்வதற்கு முன்னமே செய்தி அரசல்புரசலாக அலுவலகத்தில் உலவ ஆரம்பித்துவிடும். அந்த நேரத்தில் நிறுவனத்துக்கு வருமானம் தருகிற ஒரு விஷயத்தைக் கையிலெடுத்துச் செய்ய ஆரம்பித்தால், நீங்கள் நிறுவனத்துக்குத் தேவையான வராக மாறிவிடுவீர்கள்.

மாற்றங்களுக்கேற்ப மாறுங்கள்!

வியாபார மாற்றங்கள், பொருளாதார மாற்றங்கள், தொழில்நுட்ப மாற்றங்கள் என்று தற்போதைய நிறுவனங்களில் வேகமான, அதே நேரம் அபரி மிதமான மாற்றங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. அதற்கு ஏற்ப மாறிக்கொண்டே இருங்கள். அதிலும் உலக அளவில் உங்கள் துறையில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கின்றனவோ அதற்கேற்ப மாறிக்கொண்டே இருந்தால், உங்கள் வேலைக்கு எந்தக் காலத்திலும் ஆபத்து வராது.

வெற்றிக்கான சிம்பிள் மந்திரம், மற்றவர்களைவிட உங்களுக்கு அதிகம் தெரிய வேண்டும். மற்றவர்களைவிட நீங்கள் அதிகம் செய்ய வேண்டும்.

உடலில் 40, வேலையில் 20-ஆக இருங்கள்!


புது டெக்னாலஜி பழைய டெக்னாலஜியை ஓரம்கட்டி விடும். அதேபோல், நிறுவனத்தில் புதிதாகச் சேர்ந்த இளம் தலை முறையினரால், முந்தைய தலை முறையினர் ஆட்குறைப்பு லிஸ்ட்டில் சேர்ந்துவிடுவதற்கு வாய்ப்பிருக்கிறது. இப்படி நிகழாமல் இருக்க உங்கள் வொர்க்கிங் ஸ்டைலை இளமையாக, சுறுசுறுப்பாக வைத்திருங்கள். இதை எல்லோருக்கும் தெரியும்படி வைத்திருப்பது அதைவிட முக்கியம். சர்வைவல் ஆஃப் தி ஃபிட்டஸ்ட்டில் மிக முக்கியமான பாயின்ட் இது.

கற்றுக்கொள்ளுங்கள்; கற்றுக் கொண்டதை மறந்துவிடுங்கள்!


இன்று நீங்கள் கற்றுக் கொள்வதை நிறுத்திவிட்டீர்கள் என்றால், நாளை உங்கள் வளர்ச்சி நின்றுவிடும். அதனால், நீங்கள் வேலைபார்க்கிற நிறுவனத்தின் வளர்ச்சிக்குச் சமமாகவோ, அதற்கும் அதிகமாகவோ கற்றுக் கொள்ளுங்கள். வேலை தொடர் பான புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளுங்கள். அதைவிட முக்கியமாக ஏற்கெனவே கற்றுக் கொண்ட அவுட் டேட்டட் விஷயத்தை மறந்துவிடுங்கள். கற்றுக்கொண்டதில் எவை யெல்லாம் இன்னும் ஆழமாகக் கற்றுக்கொள்ள முடியுமோ, அவற்றை மறுபடியும் ஒருமுறை கற்றுக்கொள்ளுங்கள்.

ஸ்மூத்தான ரிலேஷன்ஷிப்பில் இருங்கள்!


நிறுவனத்தில் எல்லோரிடமும் சண்டை, சச்சரவு இல்லாமல் ஸ்மூத்தான ரிலேஷன்ஷிப்பில் இருங்கள். யாருடனும் பிரச்னை இல்லாமல் தானுண்டு, தன் வேலையுண்டு என்று இருப்பவர்கள் தலைமைகளின் குட் புக்கில் இருப்பார்கள். அதனால், இவர்கள் ஆட்குறைப்பில் அடிபட மாட்டார்கள்.

கீ ரோலில் இருங்கள்!


எல்லா நிறுவனங்களிலும் சில பேரைத் தொட்டால் நிறுவனமே தள்ளாடிவிடுகிற அளவுக்கு கீ ரோலில் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவராக உங்களை நிலைநிறுத்திவிடுங்கள். இப்படிப்பட்ட இடத்தில் நீங்கள் இருக்க வேண்டுமென்றால், சோர்வில்லாமல் உழைத்துக்கொண்டே இருக்க வேண்டும்.

நல்ல கிரியேட்டராக இருங்கள்!


மெஷின்கள் வந்தபிறகு, மனித உடல்வலு இரண்டாம்பட்சமானது. டெக்னாலஜி இடப்பக்க மூளையின் வேலையைச் செய்ய ஆரம்பித்தது. ஆனால், வலப்பக்க மூளையின் கிரியேட்டிவிட்டியை ரீ பிளேஸ் செய்ய முடியாது. உங்கள் நிறுவனத்தில் நீங்கள் நல்ல கிரியேட்டராக இருங்கள். ஆட்குறைப்பு பயமின்றி வேலையைப் பாருங்கள்.

ஸ்மார்ட்டாக வேலை பாருங்கள்!

சிலர் மாய்ந்து மாய்ந்து வேலை பார்ப்பார்கள். எண்ணிக்கை ஓஹோவென்று இருக்கும். டார்கெட்டையும் அச்சீவ் செய்துவிடுவார்கள். ஆனால், ரிசல்ட் வராது. அதாவது நிறுவனத்துக்கு வருமானம் வராது. அதனால், ரிசல்ட் வரும்படி ஸ்மார்ட்டாக வேலை பாருங்கள். ஆட்குறைப்பு லிஸ்ட்டில் நீங்கள் நிச்சயம் இருக்க மாட்டீர்கள்.

நன்றி

ந.விகடன்
Post Reply