புதிய ஹால்மார்க் விதிகளை நகை வியாபாரிகள் எதிர்ப்பது ஏன்..? விரிவான அலசல்...

தங்கம்
Forum rules
பொறுப்புத் துறப்பு

வர்த்தகம் மற்றும் சேமிப்பு தளத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் கட்டுரைகள் அல்லது செய்திகள் வர்த்தகம் மற்றும் சேமிப்பு தளத்தின் உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, இவற்றால் ஏற்படும் இழப்புகளுக்கு வர்த்தகம் மற்றும் சேமிப்பு தளம் பொறுப்பேற்காது.

காப்புரிமை மீறல்கள் இடம்பெற்றிருந்தால் அறியத்தரலாம். உடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
Post Reply
தருண்
Posts: 276
Joined: Sun Jan 10, 2021 5:49 pm

புதிய ஹால்மார்க் விதிகளை நகை வியாபாரிகள் எதிர்ப்பது ஏன்..? விரிவான அலசல்...

Post by தருண் »

தங்கநகைகளில் ஹால்மார்க் கட்டாயம், 14, 18 மற்றும் 22 காரட் தங்க நகைகளை மட்டுமே விற்க வேண்டும் என்கிற பல்வேறு விதிமுறைகள் கடந்த ஜூன் மாதம் 16-ம் தேதியிலிருந்து அமலுக்கு வந்திருக்கின்றன.

இந்த நிலையில், மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் இந்தப் புதிய விதிமுறைகளை எதிர்த்து `சென்னை நகை வியாபாரிகள் சங்கம்’ சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மத்திய அரசு இதற்குப் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இது குறித்து சென்னை தங்க நகை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஜெயந்திலால் ஜலானியிடம் பேசினோம்.

`தற்போதைய நிலையில் 14, 18 மற்றும் 22 காரட் தங்கம் உட்பட 15, 16, 17, 19, 20, 21 மற்றும் 24 காரட் தங்கத்தையும் விற்பனை செய்யும் வழக்கம் நடைமுறையில் இருக்கிறது. ஆனால், மத்திய அரசின் புதிய விதிமுறை 14, 18 மற்றும் 22 காரட் தங்க நகைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று சொல்கிறது. மேலும், ஆன்லைன் சார்ந்த நடவடிக்கைகளையும், ஹால்மார்க் சிஸ்டத்தையும் கொண்டு வந்திருக் கிறது. இது சிறு மற்றும் நடுத்தர நகை வியாபாரிகளைப் பெரிதும் பாதிக்கும்.

மூன்று காரட்டுகளில் மட்டுமே நகைகளை விற்க முடியாது!

ஹால்மார்க் கட்டாயமாக்கப் படுவதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், குறிப்பிட்ட காரட் நகைகள் விற்பனையைச் செய்ய வேண்டும் என்பதுதான் எங்களுக்கு பிரச்னை யாக இருக்கிறது. அரசு சொல்வது போல 14, 18 மற்றும் 22 காரட் நகைகளை மட்டுமே விற்பனை செய்தால், 19 மற்றும் 14 காரட்டுகளில் மட்டுமே தயாரிக்கப்படும் இத்தாலி நாட்டு நகைகளையும், துருக்கி யிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 21 காரட் நகைகளையும் வியாபாரி களால் விற்பனை செய்ய முடியாது.

மேலும், தமிழகத்தில் மட்டும் சின்னதும் பெரியதுமாக மொத்தம் 35,000 நகைக்கடைகள் இருக்கின்றன. ஆனால், மொத்தம் 104 ஹால்மார்க் சென்டர்கள் மட்டுமே இயங்கு கின்றன. இது மிக மிகக் குறைவு. இதே நிலைமைதான் மற்ற மாநிலங்களிலும்.

Image

ஒரு ஹால்மார்க் பிரின்ட் இயந்திரம் கொண்ட ஒரு ஹால்மார்க் சென்டரில் ஒரு நாளைக்கு (8 மணி நேரம்) அதிகபட்சம் 500 நகைகளுக்கு மட்டுமே ஹால்மார்க் செய்ய முடியும் என்கிற நிலை இருப்பதால், ஏற்கெனவே நகைகளுக்கு ஹால்மார்க் பெறுவதில் அதிக நேரம் விரயம் ஆகிறது.

மேலும், தங்கநகைகளை ஆன்லைனில் ஆவணப்படுத்துவதில் கொண்டுவரப்பட்டிருக்கும் புதிய விதிமுறைகளால் நேரம் விரயமாவதுடன், வேலையாட்களின் எண்ணிக்கையையும் அதிகப்படுத்த வேண்டியிருக்கிறது. தற்போதைய சூழலில் குறு, சிறு மற்றும் நடுத்தர நகை வியாபாரிகளுக்கு இது போன்ற விஷயங்களை நடைமுறைப் படுத்துவது முடியாத காரியம்.

அனைத்து நகைகளையும் 14, 18 மற்றும் 22 காரட் தங்கத்தில் செய்து விட முடியாது. டிசைன்களுக்கு டிசைன் தங்கத்தின் கலப்பு வித்தியாசப்படும். நுகர்வோர்கள் தாம் தாங்கள் என்ன நகைகளை அணிய வேண்டும், எந்த டிசைன்களில் அணிய வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். புதிய விதிமுறை களைக் கடைப்பிடித்தால், வாடிக்கை யாளர்களின் விருப்பம் நிறைவேறாது. இதனால் எங்களுடைய நகை வியாபாரத் தொழிலும் பாதிப்பு அடையும்.

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத் திருக்கிறோம். இந்த வழக்கில் நல்ல முடிவு வரும் என்று எதிர்பார்க்கிறோம்’’ என்றார் ஜெயந்திலால் ஜலானி.

ஹால் மார்க் பெறுவது எளிது...

சென்னை தி.நகரில் உள்ள பி.ஐ.எஸ் அங்கீகாரம் பெற்ற கேசர் ஹால் மார்க்கிங் சென்டர் உரிமையாளரான ராஜ்குமார் ஜெயினிடம் இது குறித்துப் பேசினோம்.

``ஆன்லைன் போர்ட்டல் ஆப்ஷன்கள் மூலம் ஒரு நாளைக்கு (8 மணி நேரம்) ஒரு இயந்திரம் கொண்ட ஹால்மார்க் சென்டரில் 500 நகைகளுக்கு மட்டுமே ஹால்மார்க் செய்ய முடியும் என்பது உண்மைதான். ஆனால், ஒரு ஹால்மார்க் சென்டர் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் மட்டுமே இயங்க வேண்டும் என எந்தக் கட்டாயமும் கிடையாது. ஷிஃப்ட் அடிப்படையில் இயங்க ஹால்மார்க் சென்டர்களுக்கு அரசு அனுமதித்திருக்கிறது. அதன்படியே பல ஹால்மார்க் சென்டர்கள் தற்போது இயங்கி வருகின்றன. டிமாண்ட் அதிகரிக்கும் போது, தேவையான வேலை யாள்களைக் கொண்டு, வேலை செய்யும் நேரத்தை அதிகப்படுத்துவதில் ஹால் மார்க் சென்டர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை.

அதேபோல, பெரும் பாலான ஹால்மார்க் சென்டர்களின் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஹால்மார்க் பிரின்டிங் மெஷின்கள் இயக்கத்தில் இருக்கின்றன. அப்படி இருக்கும்போது ஹால்மார்க் சென்டர்கள் குறைவு, அதனால் ஹால்மார்க் முத்திரையிட உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்பதுபோல, அவர்கள் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

மேலும், ஹால்மார்க் சென்டர்களின் தேவை எங்கு அதிகமாக இருக்கிறதோ, அங்கெல்லாம் ஹால்மார்க் சென்டர் களை அமைக்க அரசு நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது.

தற்போதைய நிலையில், அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்டன. நகை வியாபாரிகளிடமிருந்து ஒரு நகையை வாங்கி, அதைப் பல்வேறு பரிசோதனைகளுக்கு உட்படுத்தி, ஹால்மார்க் முத்திரை யிட்டு, மீண்டும் அதை அந்த நகைக்கடைக்காரரிடம் கொடுப்பது வரை எங்களுடைய ஹால்மார்க்கிங் தொடர்பான அனைத்து செயல்பாடுகளும் ஆன்லைனில் ஆவணப்படுத்தப் படுகின்றன. இதனால்தான் அதிக நேரம் பிடிக்கிறது.

இன்னும் ஓரிரு மாதங்களில் இவை அனைத்தும் அரசால் சரிசெய்யப்படும் என எதிர்பார்க்கிறோம். அதன் பிறகு, முன்பு இருந்ததுபோல ஹால் மார்க்கிங் வேலைகள் வேகமெடுக்கும்” என்றார் தெளிவாக.

போலி தங்க நகைகள், கள்ளச் சந்தையில் புழங்காமல் இருக்க ஹால்மார்க் முத்திரை கட்டாய மாக்கப்படுவது நியாயமே. அதேசமயம், வியாபாரிகளின் நடைமுறைச் சிக்கல் களை அரசாங்கம் கவனத்தில் எடுத்துக் கொண்டு, அதற்கான வசதி வாய்ப்புகளை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பது பெரும்பாலான நகைக்கடை வியாபாரிகளின் கோரிக்கையாக இருக்கிறது. இந்த விஷயத்தில் மக்கள் ஏமாறாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகள் மத்திய அரசாங்கம் செய்யும் அதேசமயம், நகைக்கடை நிறுவனங்களும் பாதிப்பு அடையாதபடிக்கு பார்த்துக் கொள்ள வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு!

ந.விகடன்
Post Reply