கார் வாங்கப் போறீங்களா? இவற்றையெல்லாம் கொஞ்சம் கவனியுங்க! காருக்கான நிதி ஆலோசனை இது!

வாகன உலகம்
Forum rules
பொறுப்புத் துறப்பு

வர்த்தகம் மற்றும் சேமிப்பு தளத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் கட்டுரைகள் அல்லது செய்திகள் வர்த்தகம் மற்றும் சேமிப்பு தளத்தின் உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, இவற்றால் ஏற்படும் இழப்புகளுக்கு வர்த்தகம் மற்றும் சேமிப்பு தளம் பொறுப்பேற்காது.

காப்புரிமை மீறல்கள் இடம்பெற்றிருந்தால் அறியத்தரலாம். உடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
Post Reply
தருண்
Posts: 276
Joined: Sun Jan 10, 2021 5:49 pm

கார் வாங்கப் போறீங்களா? இவற்றையெல்லாம் கொஞ்சம் கவனியுங்க! காருக்கான நிதி ஆலோசனை இது!

Post by தருண் »

நமக்கென சொந்தமாக ஒரு கார் வாங்கி, அதில் குடும்பத் துடன் பயணிக்க வேண்டு மென்ற ஆசை நடுத்தரக் குடும்பத்தினருக்கு எப்போதும் உண்டு. அப்படிப்பட்ட நடுத்தர குடும்பங்களின் கனவுகளை நனவாக்கவே மாருதி, டாடா போன்ற நிறுவனங்கள் ஆல்டோ, இயான், நானோ மாதிரியான கார்களைக் கொண்டு வந்தன. இதுபோன்ற சிறு கார்கள்தான் நடுத்தரக் குடும்பங்களின் கார் வாங்கும் ஆசையை நிறைவேற்ற உதவுகின்றன.

ஆனால், ஆசைப்பட்ட மாதிரி, ஒரு காரை வாங்குவதுடன் வேலை முடிந்துவிடுமா? அடுத்தடுத்து பல வகையிலும் செலவுகளைச் செய்ய வேண்டும். இந்தச் செலவுகளை எல்லாம் நம்மால் செய்ய முடியுமா, இந்தச் செலவுகளை எல்லாம் செய்து கார் வாங்க முடியாது எனில், என்ன செய்யலாம் என்பதைப் பார்ப்போம்.

இ.எம்.ஐ தொகையை மட்டும் பார்த்தால் போதுமா?

இரண்டு லட்சம் ரூபாயிலிருந்தே கார்கள் விற்பனை ஆகின்றன. அதில், உங்களுடைய வருமானத்துக்கு ஏற்ப இருப்பது எது என்பதை முதலில் கண்டறிய வேண்டும். சராசரியாக ஒருவருடைய மாத வருமானம் 30,000 ரூபாயாக இருந்தால், அவர் ரூ.2 லட்சம் - 5 லட்சம் ரூபாய்க்குள்ளான பட்ஜெட்டில் கார் வாங்க விரும்பு வார். அப்படி வாங்கும்போது, அதை இ.எம்.ஐ முறையில் வாங்கினால், காரின் விலையுடன் வட்டியும் சேர்த்து ஐந்து வருடங்களுக்கு 7,000 ரூபாய் செலுத்த வேண்டும். ‘‘அட, 7,000 ரூபாய்தானே! ஈஸியாக கட்டிவிடலாமே’’ என்று நினைத்து கார் வாங்கும் முடிவை எடுத்துவிடக் கூடாது. அடுத்தடுத்து வரும் செலவு களையும் கணக்கிட வேண்டும். என்னென்ன செலவுகள் வரும்?

இன்ஷூரன்ஸ் என்னும் கட்டாயச் செலவு...

அதில் முதல் செலவு, இன்ஷூ ரன்ஸ். காருக்கு இன்ஷூரன்ஸ் தொகை ஒவ்வோர் ஆண்டும் முறை யாகச் செலுத்தியாக வேண்டியது கட்டாயம். அந்தத் தொகை எவ்வளவு என்பது, கார் வகைகளுக்கேற்ப வேறுபடலாம். 1500 சி.சி-க்குள் வருகிற கார்களுக்கு சராசரியாக ரூ.8,000 - ரூ.9,000 வரை இன்ஷூரன்ஸ் பிரீமியம் கட்டியாக வேண்டும். காருக்கு ஏதாவது ஒரு பிரச்னை ஏற்பட்டால் ஒழிய, இந்தப் பணத்தை நாம் செலவுக் கணக்கில்தான் எழுத வேண்டும்.

மலைக்க வைக்கும் பெட்ரோல், டீசல் செலவு...

அடுத்ததாக, பெட்ரோல், டீசல் செலவு. கார் பயன்படுத்தும் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த சிலரிடம் விசாரித்தபோது, “நடுத்தர மக்கள் வாங்குகிற சிறிய வகை கார்களின் சராசரி மைலேஜ் 22 கி.மீ. இப்போது பெட்ரோல் விற்கும் விலை நிலவரத்தை வைத்துக் கணக்கிட்டால், சராசரியாக ஒருவர் ஒரு மாதத்துக்கு 1000 கி.மீ வரை ஓட்டுபவராக இருந்தால், மாதம்தோறும் எரி பொருளுக்கு மட்டும் ரூ.5,000 வரை செலவாகும்” என்றனர்.

பரபர பராமரிப்புச் செலவு...

மேலும், பராமரிப்புச் செலவு களையும் முக்கியமாகக் கவனிக்க வேண்டும். அதுபற்றிக் கேட்டபோது, “தினசரி கார் பயன்படுத்துபவராக இருந்தால், ஆறு மாதத்துக்கு ஒருமுறை பராமரிப்புச் செலவுகளைச் செய்ய வேண்டும். இல்லையேல், ஒவ்வொரு 5,000 கிலோ மீட்டருக்கும் பராமரிப்புச் செலவுகளைச் செய்ய வேண்டும். அதற்கு குறைந்தபட்சம் 5,000 ரூபாய் செலவாகும். இது பொது பராமரிப்புச் செலவுகள் மட்டும்தான். இதுபோக, காரின் உதிரி பாகங்களை மாற்ற வேண்டிய நிலை வந்தால், அதற்குத் தனி செலவு. அதற்கு ஆகும் செலவு, இரு சக்கர வாகனங்களுக்கு இருப்பதைவிட மூன்று மடங்கு அதிகம். மேலும், 15,000 கிலோ மீட்டர்களைக் கடந்த பிறகு டயர் தேயத் தொடங்கும், அப்போது அதையும் மாற்ற வேண்டும். நான்கு டயர்களுக்கும் சேர்த்து ரூ.10,000 முதல் ரூ.12,000 வரை செலவாகும். இது போக, பார்க்கிங், டோல் போன்றவற்றுக்கு தோராயமாக ரூ.1,000 வரை செலவாகும்” என்று கூறினர்.

மொத்தமாக ஒரு மாதத்துக்கு, தோராயமாகக் குறைந்தபட்சம் 6,500 முதல் 7,000 ரூபாய் வரை செலவாகலாம். ஓராண்டுக்கு மொத்தச் செலவுகளையும் சேர்த்து, சொந்த கார் வைத்திருப்பவர்கள் சராசரியாக ரூ.1 லட்சம் செலவழிக்க வேண்டியிருக்கும். உங்களுடைய ஓராண்டுக்கான வருமானத்தில், காருக்கான இ.எம்.ஐ-யுடன் சேர்த்து இந்தத் தொகைகளையும் சேர்த்து, அதை உங்கள் பட்ஜெட்டிலிருந்து கழித்துக் கவனியுங்கள். வீட்டு வாடகை அல்லது வீட்டுக் கடன், குழந்தைகளுக்கான பள்ளி அல்லது கல்லூரிச் செலவுகள், வீட்டுக்கு ஆகக்கூடிய இதர செலவுகள் என்று அனைத்தையும் மீதித் தொகையில் கணக்கிடுங்கள். காருக்கு ஆகும் இந்தச் செலவுகளைக் கழித்த பிறகும் உங்கள் பட்ஜெட்டில் துண்டு விழாதபடிக்கு பார்த்துக் கொள்வது அவசியம்.

பட்ஜெட்டில் 20% மிச்சமானால்...

மாதம்தோறும் நீங்கள் போடும் உங்கள் வரவு செலவு பட்ஜெட்டில், ஒவ்வொரு மாதமும் செலவுகள் போக, 20% தொகை கையில் சேமிப்பாக இருக்கிறதா என்று பாருங்கள். அப்படி இருந்தால் மட்டுமே நீங்கள் கார் வாங்குவது சரியான முடிவாக இருக்கும்.

ஒருவர் கார் வாங்குவதாக இருந்தால், நிதி சார்ந்து எவற்றை யெல்லாம் கவனிக்க வேண்டும் என்பது குறித்து நிதி ஆலோசகர் ராஜசேகரனிடம் பேசினோம்.

“ஒருவர் கார் வாங்குவதாக இருந்தால், அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் வருமானத் தைப் பொறுத்துத் திட்டமிட வேண்டும். அதை மாதம்தோறும் இ.எம்.ஐ கட்டி வாங்குவதாக இருந்தால், அவர் கட்டுகிற இ.எம்.ஐ தொகையில் இரண்டு மடங்கு எடுத்து வைக்கத் திறனுடையவராக இருக்க வேண்டும். உதாரணமாக, ஒருவர் ரூ.10,000 ரூபாய் மாதம் கார் இ.எம்.ஐ செலுத்துகிறார் எனில், மாத வருமானத்தில் ரூ.20,000 எடுத்து வைக்கக்கூடிய வகையில் அவருடைய வருமானம் இருக்க வேண்டும்.

அதன்மூலம், காருக்கான பராமரிப்புச் செலவுகளையும் எரிபொருள் செலவுகளையும் இன்ஷூரன்ஸ் போடுவதற்கும் அந்தத் தொகை தேவைப்படும். மேலும், திடீர் செலவுகளைக் கூட எதிர்பாராத நேரங்களில் காருக்குச் செய்ய வேண்டி யிருக்கும். அதற்கெல்லாம் இந்தத் தொகையில் ஒரு குறிப்பிட்ட தொகையை எடுத்து வைக்க வேண்டும். அது பின்னாளில், புதிய காரை மாற்றும்போது முன்பணத்துக்காகவும்கூடப் பயன்படலாம்.

காருக்கான தேவை கட்டாய மாக இருந்தால் மட்டுமே அதை வாங்க வேண்டும். வாரம் ஒருமுறை பயன்படுத்துவதற்காக என்றெல்லாம் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது. கௌரவத் துக்காக கார் வாங்கி, வாரம் அல்லது மாதம் ஒருமுறை மட்டுமே பயன்படுத்துவது பணத்தை வீணடிக்கும் வேலை. அதைச் செய்யவே கூடாது. தவிர, கார் வாங்கிய பின், கார் பராமரிப்புச் செலவுக்கும் சிலர் கடன் அட்டைகளைப் பயன் படுத்தி அதிக வட்டி செலுத்தும் நிலைக்கு உள்ளாகிறார்கள். இந்தத் தவறுகள் எல்லாம் நம்மை ஏழையாக்குமே தவிர ஒருபோதும் நம்மைப் பணக்காரன் ஆக்காது’’ என்று கூறினார்.

வாடகைக் கார்கள் பெஸ்ட் சாய்ஸ்...

வாரம் ஒருமுறையோ அல்லது மாதம் ஒருமுறையோ காரில் குடும்பத்துடன் பயணிப்போம் என்பவர்களுக்கு வாடகைக் கார்கள் பெஸ்ட் சாய்ஸாக இருக்கும். காரில் 1,000 கி.மீ தூரம் பயணிக்க குறைந்தபட்சம் ரூ.8,000 ஆகிறது. பெரிய சொகுசு கார் எனில், ரூ.20,000 ரூபாய் வரை ஆகலாம். ஆண்டில் ஒரு முறையோ, இருமுறையோ குடும்பத்துடன் சுற்றுலா செல்ல நினைப்பவர்கள் இந்த வாடகைக் கார்களை தாராளமாக பயன் படுத்திக்கொள்ளலாம். வாரம் ஒருமுறை நகரத்துக்கு உள்ளேயே குடும்பத்துடன் வெளியே செல்வதாக இருந்தால், இருக்கவே இருக்கிறது ஓலாவும் ஊபரும். ஒரு வாரத்துக்கு ரூ.1,500 என்றால்கூட ஒரு மாதத்துக்கு ரூ.6000-தான் ஆகும். பராமரிப்புச் செலவு, இன்ஷூரன்ஸ் பிரீமியம், வண்டியை ஓட்டும் டென்ஷன் என்று எந்தப் பிரச்னையும் இருக்காது.

பழைய கார்களைப் பரிசீலிக்கலாம்...

‘வாடகை காரெல்லாம் எனக்கு வேண்டாம். சொந்தமாக ஒரு கார் வாங்கியே ஆக வேண்டும்’ என்பவர்கள், புது காருக்கு பதிலாகப் பழைய கார்களைப் பரிசீலிக்கலாம். வாங்கிய சில ஆண்டுகளில் கார்களை விற்றுவிட்டு, வேறொரு காரை வாங்கும் பழக்கம் தற்போது பலரிடம் வந்திருக்கும் பழைய கார் சந்தையில் பல புதிய கார்கள் நிறையவே இருக்கின்றன. புதிய கார்களுக்கான விலையில் 50 - 60% தள்ளுபடி விலையில் இந்த கார்கள் கிடைப்பதால், கார் வாங்க நாம் நிறைய பணம் செலவு செய்ய வேண்டியதில்லை. ஆனால், பராமரிப்புச் செலவு புதிய கார்களைவிட அதிகமாக இருக்கும். இன்ஷூரன்ஸ் பிரிமீயம் போன்றவற்றையும் தவிர்க்க முடியாது. எல்லா வற்றுக்கும் மேலாக, மறுவிற்பனை செய்யும்போது மிக மிகக் குறைந்த தொகையே கிடைக்கும்.

ஆக, சொந்தமாக கார் வாங்குவதாக இருந்தால், அதை வைத்திருப்பதற்கு ஆகும் செலவுகளையும் உங்களால் சமாளிக்க முடியுமா என்பதைச் சிந்தியுங்கள். வாரத்துக்கு ஒருமுறை பயன்படுத்த, குடும்பத்தோடு எப்போதாவது இன்பச் சுற்றுலா, ஆன்மிக சுற்றுலா என்று செல்வதற்கென்றே கார் வாங்குவதை தவிர்ப்பது நல்லது.

சொந்தமாக வேன் வாங்கும்போது..!

கடை வைத்திருப்பவர்கள் சரக்குகளைக் கொண்டு செல்லவும், கொண்டு வரவும் சிறுவேன்களை வாங்குகிறார்கள். அப்படி வாங்கும்போதும்கூட உங்களுக்குத் தினமும் தேவைப்படும்; தினம்தினமும் வாடகைக்கு வேன் எடுக்க முடியாது என்பவர்கள் மட்டும் சொந்தப் பணத்திலோ, கடனுக்கோ வேனை வாங்கலாம். வாரம் ஒருமுறை அல்லது மாதம் ஒருமுறை வேன் தேவை எனில், வாடகைக்கு எடுப்பதே பெஸ்ட்!

ந.விகடன்
Post Reply